பாலிதவுக்கு எதிராக பொலிஸ் அவசரப் பிரிவில் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

பாலிதவுக்கு எதிராக பொலிஸ் அவசரப் பிரிவில் முறைப்பாடு!


நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, நேற்றைய தினம் சபையில் கத்தி வைத்திருந்ததாக பொலிஸ் அவசரப் பிரிவில் மஹிந்த தரப்பு சட்டத்தரணியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற தள்ளுமுள்ளின் போது பாலித தெவரப்பெருமவின் கையில் சிறிய கத்தியொன்று காணப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பிலேயே அவருக்கெதிராக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை தலும் அமுனுகம சபாநாயகரின் ஒலி வாங்கியை பிடித்திழுத்துத் தனது கையை காயப்படுத்திக் கொண்டமையும் பிரசன்ன ரணவீர சபாநாயகரின் இருக்கையில் நீர் ஊற்றி சேதப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment