பெரிய 'கட்டுப்' போட்டுக் கொண்ட திலும்! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

பெரிய 'கட்டுப்' போட்டுக் கொண்ட திலும்!


நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமளிக்குள் சபாநாயகரின் ஒலி வாங்கியை இழுத்துப் பிடுங்க முயற்சித்துத் தனது கையைக் காயப்படுத்திக் கொண்ட திலும் அமுனுகம வைத்தியசாலையில் பெரிய கட்டுப் போட்டுக் கொண்டுள்ள காட்சியடங்கிய நிழற்படம் வெளியாகியுள்ளது.



திகன வன்முறையின் போது அதனை வழி நடாத்தியவர்களுள் ஒருவராகக் கருதப்படும் திலும் அமுனுகம தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்ட போதிலும், அவருக்கு கத்தியால் குத்தப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.

எனினும், காணொளிப் பதிவுகள் மூலம் திலும் தானாகச் சென்று ஒலி வாங்கியைப் பிடுங்க முயன்ற காட்சிகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment