மைத்ரியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: ரணில் - sonakar.com

Post Top Ad

Friday, 9 November 2018

மைத்ரியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: ரணில்


கருத்து வேறுபாடுகளை மறந்து மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


அதிரடியாக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் ரணில், தொடர்ந்தும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்க வைத்துள்ளதாக தெரிவிக்கிறார். இதேவேளை, தாமும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என மஹிந்த அணி தெரிவிக்கிறது.

இந்நிலையில், தம் மீதான வெறுப்பை நாட்டு மக்கள் மீதான சுமையாக மாற்றக் கூடாது என தெரிவிக்கின்ற ரணில், தாம் மைத்ரியுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவே இருப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment