
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைத் தவிர்க்க பொதுத் தேர்தலை நடாத்துவதே ஒரே வழியென தெரிவிக்கிறார் பொது ஜன பெரமுனவின் பினாமித் தலைவர் ஜி.எல். பீரிஸ்.
தம்மால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனும் நம்பிக்கையிலேயே மஹிந்த தரப்பு, அதனை அடைந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து வருகிறது.
பொதுத் தேர்தலுக்குத் தாம் தயாராகவே இருப்பினும், மஹிந்த நிர்வாகத்தின் கீழ் தேர்தலை நடாத்த அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகிறது. இந்நிலையில் எந்தக் கட்சியிடம் ஆட்சியதிகாரம் உள்ளது? என்பது கேள்விக்குறியாகியுள்ளதுடன் பல அரச நிறுவனங்கள் முடங்கிப் போயுள்ளன.
இப்பின்னணியில் தற்போது தேர்தலை நடாத்துவதே ஒரே வழியென ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment