
மூன்று வருட கூட்டாட்சியில் ஊழல் நடந்ததாகவும் அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவமைத்து விசாரிக்கப் போவதாகவும் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்களை வரவேற்றுள்ள கபீர் ஹாஷிம், அவ்வாறே ஊழல் நடந்திருந்தால் அதில் மைத்ரிக்கும் கட்டாய பங்குண்டு என விளக்கமளித்துள்ளார்.
அனைத்து தீர்மானங்களும் மைத்ரி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டங்களிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மற்றவர்களை விரல் நீட்டி மைத்ரி தப்பிக் கொள்ள முடியாது என தெரிவிக்கின்ற கபீர், ஊழல் நடந்திருந்தால் அதில் மைத்ரிபாலவின் பங்கும் உறுதி செய்யப்பட்ட விடயம் என விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சட்ட-ஒழுங்கு மற்றும் நீதித்துறையை கையில் வைத்துக் கொண்டு விசாரணைகளை முடக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சியே என மைத்ரி தெரிவித்த கருத்தையும் மறுத்துள்ள கபீர், ஜனாதிபதியின் தலையீட்டினாலேயே நீதித்துறை செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment