அக்குறணை: பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 26 November 2018

அக்குறணை: பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு


எமது நாட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் துன்ப துயரங்களை எதர்நோக்கி சம்பாதிக்கும் பணத்தை தம் நாட்டு மக்களின் நன்மை கருதி பொது விவகாரங்களுக்காக பணத்தைச் செலவு செய்து என்பது மிகவும் உயர்ந்த புண்ணிய காரியமாகும். அவர்கள் எந்த நல்ல நோக்கத்திற்காக பணத்தைச் செலவு செய்கின்றார்களோ அந்த நோக்கத்தை பயனாளிகள் அடைய வேண்டும் என்று கண்டி மாவட்ட செயலாளர்  ஈ எல். டி. ஜி. திஸ்ஸ கம்பவத்த  தெரிவித்தார்.

அக்குறணை Helping Hands அமைப்பின் ஏற்பாட்டில் எட்டாவது தடவையாக  வழங்கும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு  அமைப்பின் தலைவர் இர்பான் ஏ. காதர் தலைமையில் அக்குறணை முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி மாவட்ட செயலாளர் ஈ எல். டி. ஜி. திஸ்ஸ கம்பவத்த  இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

நாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணம் கல்வி ஆகும். நாங்கள் கல்வி கற்கும் போது இப்பயான உதவிகள் இருக்க வில்லை. எனினும் எங்களுடைய பெற்றோர்களின் முயற்சியினால்  உயந்த இலக்கை அடைந்துள்ளோம்.  இது தொடர்பாக பெற்றோர்கள் கவனம் எடுத்தல் வேண்டும். தங்களுடைய பிள்ளைகளின் கல்வி நலனுக்காக வழங்கப்படும் இந்த உதவிகளைக் கொண்டு எந்தளவுக்கு தங்களுடைய பிள்ளைகளின் மீது  கவனம் செலுத்தி நாட்டுக்கும் சமூகத்திற்கு நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டும். இதற்கு பெற்றோர்களின் அன்பான ஆதரவு இருத்தல் வேண்டும். 

2500 பேருக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்குவது என்பது பெருந் தொகையிலான மாணவர்கள் பயன் அடையவுள்ளார்கள். எமது நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் துன்பம் கஷ்ட நிலைகளுக்கு உட்பட்டு சம்பாதிப்பவர்கள் பொதுச் சேவைக்காக பணத்தைச் செலவு செய்வது  புண்ணிய காரியமாகும். இந்தப் பணத்தைச் செலவு செய்பவர்கள் சிறுபவர்கள் கல்வி கற்று சிறந்த முறையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற வகைகயலேயே உதவி செய்கின்றார்கள். 

பொதுவாக பிரதேச மட்டத்திற்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் பணிகள் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்குள் மட்டும் தான் சேவை செய்ய வேண்டும். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்தால் அந்த மாவட்டம் முழுக்க சேவை செய்யலாம். இந்த அமைப்பை மாவட்ட செயலகத்தில் பதிவு செய்து கண்டி மாவட்ட முழுக்க பரந்து பட்ட சேவையை மேற்கொள்ளுவதற்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கின்றேன். சமூக சேவைத் திணைக்களத்தில் பதிவு செய்தால் இலங்கை முழுவதும் தங்களுடைய சேவையைச் செய்யலாம். 

வெளிநாட்டு உதவிகள் மூலம் செய்யப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏதோ வேறு கோணங்களில்  தங்களுடைய சேவையை செய்ய முன்வருகின்றனர். எனினும இந்த அமைப்புக்கள் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. எதிர் வரும் காலங்களில் ஹெல்பிங் ஹேன்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளைச் செய்யவும், அனர்த்தங்கள் ஏற்படும் போது உதவிகளைச் செய்யவும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன்,  எமிரேட் நிறுவனத்தின் உத்தியோகஸதர் ரிசா முஹமட் பௌத்த சமய விஹாராதிபதிகள், சமூக நல ஆர்வலர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment