
மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமை 19ம் திருத்தச் சட்டத்துக்குப் புறம்பானது மாத்திரமன்றி ஜனாதிபதியின் செயல் அடிப்படை உரிமை மீறல் என அறிவிக்கக் கோரி தம்பர அமில தேரர் உச்ச நீதிமன்றில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றைக் கலைத்தமையை எதிர்த்து 13 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பிலான தீர்ப்பு டிசம்பர் 7ம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் என தம்பர அமில தேரர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment