
நான்கு மாதங்களுக்கான மஹிந்த ராஜபக்சவின் இடைக்கால பட்ஜட் ரூ.1,735 பில்லியன் என அறிவிக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நாளைய தினம் மஹிந்த பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிகழவுள்ளதோடு மஹிந்த அரசாங்கம் சட்டவிரோதமானது என ஐ.தே.க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரும் மஹிந்த தரப்பில் குமார வெல்கமவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடைக்கால பட்ஜட் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதுடன் வழமை போன்று தேர்தலை முன்னிட்ட பல சலுகைகளும் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment