
நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாது அதிகாரத்தைப் பலவந்தமாகக் கைப்பற்றியிருப்பது தவறு என பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வரும் குமார வெல்கம நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளமை தொடர்பில் மஹிந்த அணி அதிருப்தி வெளியிட்டு வருகிறது.
சொற்ப நேரமே இடம்பெற்ற இச்சந்திப்பில் 'உங்கள் சகோதரரை சந்தித்து உரையாடினேன், நீங்கள் தைரியசாலி' என ரணில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மஹிந்த அணி அதிருப்தியாளர்கள் குமார வெல்கம தலைமையில் கட்சி தாவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment