ஓட்டமாவடி: வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 November 2018

ஓட்டமாவடி: வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை போன்ற பகுதிகளில் சில இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.குறித்த பகுதிகளில் காணப்படும் வெள்ளநீரை வடிகானூடாக வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் தொடரில் நேற்று (6) ம் திகதி மீராவோடைப் பகுதிகளில் பல இடங்களில் தேங்கி நின்ற வெள்ளநீரை வடிந்தோடச் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் கட்சி பேதங்களின்றி அனைவராளும் மேற்கொள்ளப்பட்டது.

பிரதேசத்திலுள்ள பொதுமக்கள், விளையாட்டுக் கழகங்கள், அமைப்புக்கள் போன்றவைகள் பணிகளில் ஈடுபட்டனர். அதேவேளை இப் பணிகளில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் மற்றும் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின், மீராவோடை மேற்கு கிராம சக்தி மக்கள் சங்கத்தின் தவிசாளர் ஏ.ஜீ. ரபீக் உட்பட பலரும் கலந்து கொண்டு இப்பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment