பிரேரணை சட்டவிரோதம்: தினேஸ் குணவர்தன குமுறல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

பிரேரணை சட்டவிரோதம்: தினேஸ் குணவர்தன குமுறல்!


இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சட்டவிரோதமானது எனவும் அவ்வாறான ஒரு பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவிக்கிறார் தினேஸ் குணவர்தன.பிரதமரின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலான குறித்த பிரேரணைக்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 123 பேர் ஆதரவளித்துள்ளனர்.

மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றை கலைப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள அதேவேளை, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்வதுடன் அரசாங்கம் மற்றும் பிரதமர் நியமனம் சட்டவிரோதமானது என நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே, நாட்டில் அரசாங்கம் என்றொன்றில்லையெனவும் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே எனவும் சபாநாயகர் அறிவித்திருந்தமையும் மஹிந்த அரசு தம்மை நிழல் அரசாக உரிமை கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment