சபாநாயகரை வீழ்த்த முடியாது: மனம் திறக்கும் தயாசிறி! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

சபாநாயகரை வீழ்த்த முடியாது: மனம் திறக்கும் தயாசிறி!


நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத நிலையில், சபை அமர்வுகளைப் புறக்கணித்து வரும் மஹிந்த அணியினர் அதற்கான காரணம் சபாநாயகரின் நடவடிக்கைகள் என தெரிவித்து வரும் நிலையில் சபாநாயகர் 122 உறுப்பினர்களின் பக்க பலத்துடன் இருப்பதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கூட கொண்டு வர முடியாது என தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.நாடாளுமன்ற பெரும்பான்மை சபாநாயகருக்குப் பக்க பலமாக இருக்கும் நிலையில் அவரை எதிர்ப்பதாகத் தெரிவிப்பதும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முயற்சிப்பதும் முடியாத காரியம் எனவும் தயாசிறி மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, முறையான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து அரசை பதவி நீக்கலாம் எனவும் அவ்வாறு இதுவரை இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமையும் ஏலவே இரு தடவைகள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment