நாடாளுமன்றில் பரஸ்பரம் அரவணைப்புகள்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

நாடாளுமன்றில் பரஸ்பரம் அரவணைப்புகள்!


கடந்த இரு வாரங்களாக எதிரும் புதிருமாக இருந்த அரசியல் பிரதிநிதிகள் இன்று நாடாளுமன்றில் சந்தித்துக் கொண்டதையடுத்து புன்னகையுடன் கட்டித் தழுவி உறவாடிக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.மஹிந்த அணியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் இடம்பெற்று வரும் அரசியல் யுத்தத்தையே இதுவரை மக்கள் பார்த்து வந்த நிலையில் இரு தரப்பின் முக்கியஸ்தர்களும் தமக்கிடையிலான வாத விவாதங்களை புறந்தள்ளி அரவணைத்து அளவளாவிக் கொள்கின்றனர்.


வழக்கமானவே நாடாளுமன்ற அமர்வினையடுத்து இவ்வாறே அரசியல்வாதிகள் உறவாடிக்கொள்கின்ற அதேவேளை கட்சி ஆதரவாளர்கள் தமக்கிடையில் சண்டையிட்டுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment