
தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தற்காலிக பட்ஜட் ஊடாகவும் பாரிய சலுகைகளை அறிவிக்க முனையும் மஹிந்த ராஜபக்ச 2019ல் இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையை தமது அரசு திருப்பிச் செலுத்தும் எனவும் அதில் எந்த சிக்கலும் இல்லையெனவும் தெரிவிக்கிறார்.
ஜனவரி 1ம் திகதி முதல் பொது சேவை ஊழியர்களது சம்பளப் பிரச்சினையும் உருவாகும் என ஹர்ஷ மற்றும் மங்கள எச்சரித்துள்ள நிலையில் 2019ல் 15 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதும் தமக்கு எந்தச் சிக்கலும் இல்லையென மஹிந்த தெரிவிக்கின்றமையும், மஹிந்த உருவாக்கி வைத்த கடன்களையே தாம் அடைக்க முற்படுவதாக ரணில் - மைத்ரி அரசு மூன்று வருடங்களாக தெரிவித்து வந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment