மூதூர்: பள்ளிவாசல் மற்றும் சமூக அமைப்புகளுக்கான செயலமர்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

மூதூர்: பள்ளிவாசல் மற்றும் சமூக அமைப்புகளுக்கான செயலமர்வு


பள்ளிவாசல் மற்றும்  சமூக அமைப்புக்களின் முக்கியஸ்தர்களுக்கான மீட்ஸ்(MEEDS) அமைப்பின் செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை மூதூர் திரிசீடி மண்டபத்தில் இடம்பெற்றது. மூதூர்  பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச் தஸ்ரீக் நத்வி தலைமையில்  திரிசீடி, மூதூர்  பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் சிஎஸ்ஆர் அமைப்பு ஆகியவற்றின் இணை அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிரதித் தலைவரும் மீட்ஸ் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க்  ஏ.சி. அகார் முகம்மத், டாக்டர் ஷpஹான் சரூக், டாக்டர் பாயிக், அஷ்ஷெய்க்  அப்துல் முஜீப், அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் ஆகியோர்  கலந்து கொண்டு சமூக மேன்பாட்டில் பள்ளிவாசல்களின் வகிபங்கு குறித்து தெளிவுறுத்தினர்.

இதன்போது மீட்ஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட 'மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு', 'மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி' ஆகிய நூல்களின் அறிமுகமும் இடம்பெற்றது.

-மூதூர் முறாசில்

No comments:

Post a Comment