பேராதனை பல்கலைக்கழகத்தில் உலக மெய்யியல் தினம் - sonakar.com

Post Top Ad

Sunday 18 November 2018

பேராதனை பல்கலைக்கழகத்தில் உலக மெய்யியல் தினம்


ஆட்சியாளன் ஒரு மெய்யியலானாக இருப்பானாயின்  அரசியல் நிலவும் அனைத்து கெடுதிகளையும் அவனால் தடுக்க முடியும். தத்துவ அரசன் என்பவன் அரசினுடைய சிறந்த ஆட்சியாளனாக இருப்பான். சிந்தனையுடைய ஒரு மனிதனாக இருப்பான். பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் கொண்டு இருப்பான். சுதந்திரமான  தீர்க்கமான முடிவுகளை எடுப்பான். இத்தகைய பண்புகள் ஆட்சியாளனுக்கு மட்மன்றி  எல்லா மட்டத் தலவர்களுகளுக்கும் உரித்துடையவையாக இருக்கும். தத்துவ ஆட்சியாளன் தன் உணர்ச்சியைக் கொண்டு  வழிகாட்டுபவனாக, தலைமை தாங்குபவனாக  இருக்க மாட்டன்.  ஏனெனில்  உணர்ச்சி அரசியல் ஒரு போதும் வெற்றி அளிக்காது என்பதை அவன் அறிவான். அவன் தன் முழு வாழ்க்கையுமே  மக்கள் நலனுக்காக தேச நலனுக்காக அர்ப்பணிப்பான் என்று பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. எம். ஜமாஹீர் தெரிவித்தார்.



பேராதனை பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச 18 வது உலக மெய்யியல் தினம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு நிலையத்தில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. எம். ஜமாஹீர் தலைமையில்  இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

உலகளாவிய  மையப் பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கக் கூடிய புதிய ஒழுங்கு விதிகள் தேவையாகவுள்ளன.  எடுத்துக் காட்டாக, இலத்திரனியல் கழிவகற்றல் பொறுப்புணர்வு அவசியமாகும். இலத்திரனியல் கழிவுகளிலுள்ள உலோகப் பொருட்கள் மனித  உடல் நலத்துக்கும்  சூழலுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. அத்தகைய  பொருட்கள் சிறுநீரகப் பாதிப்பு, சரியான மனிதன் மனிதனின் எந்தப் பகுதி நிலையானது. தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்பான சிந்தனை பல்வேறு அம்சங்களை பேசக் கூடியதாக மெய்யியல் தத்துவம் விளங்குகின்றது.

மெய்யியலானது உண்மை நன்மை, தீமை, வாழ்க்கை, பிரபஞ்சம், மனித உரிமை, சாமாதானம், அரசு, நல்லாட்சி, நீதி, கடமை, கடப்பாடு சுதந்திரம், சமத்துவம், சமூகம், சமூகமும் தனிநபர் தொடர்பும், குற்றமும் தண்டனையும் , பெறுமானங்கள் அறவின் ஊற்றுக்கள், அறிவின் நம்பகத் தன்மை, அறிவின் வகை, நியாயம், மனம், காரண காரியம் மற்றும் மொழி போன்ற மரபு ரீதியான மற்றும் பொதுவான அடிப்படைப் பிரச்சினைகளோடும் பிரயோக மெய்யியல் உள்வாங்கும் மரணம், சுகமரணம், தற்கொலை, வன்முறை, பயங்கரவாதம், யுத்தங்கள்  மோதல்கள், இன அழிப்புக்கள், அகிம்சை சமாதானம், போதைப் பொருள்பாவனை, சுற்றுச் சூழல், துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பியோகம், திருமணம் சார் பாலியல்வல்லுறுவு, விலங்குரிமை புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் மனித இருப்பு போன்றவற்றின் மெய்யியல் மற்றும் ஒழுக்கவியல் சார் சிக்கல்கள் ஆராயப்படுவது மனங் கொள்ளத் தக்கதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  பிரதான வளவாளர்களாக  கலாநிதி சுனில் விஜேசிரிவர்தன கலந்து கொண்டு  பல்கலைக்கழக மாணவர் மத்தியில்  விசேட உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிரேஷ் விரிவுரைளாளர்களான மல்லிகா ராஜரட்ணம்,  முபிஸால் அபூபக்கர் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment