
கல்முனை பிரதேச பிரதான வீதிகளில் இரவு பகல் பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை இப் பிரதேசத்தில் நிலவுவதால் வீதிகளில் பயணம் மேற்கொள்ளும் போது வீதிகளில் கால் நடைகள் காணப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
குறிப்பாக கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதி,கல்முனை -மட்டக்களப்பு பிரதான வீதி, கல்முனையிலிருந்து சவளக்கடை செல்லும் முக்கிய பிரதான வீதிகளில் பகல்,இரவு பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதினாலும் இவ் விடயம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment