சபாநாயகருக்கு மஹிந்தவை பதவி நீக்கும் அதிகாரம் இல்லை: நிமல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

சபாநாயகருக்கு மஹிந்தவை பதவி நீக்கும் அதிகாரம் இல்லை: நிமல்!


மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லையெனவும் அதற்கான ஒரே வழி நம்பிக்கையில்லா பிரேரணை எனவும் தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டிசில்வா.ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே தோற்கடிக்க முடியும் என தெரிவிக்கின்ற அவர், இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வெறும் இடைக்காலத் தடையே எனவும் அதனை இறுதித் தீர்பாகக் கொள்ள முடியாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரமும் சபாநாயகருக்கு இல்லையென அவர் தெரிவிக்கின்றமையும் நாளை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment