சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்!


இன்று காலை கட்சித் தலைவர்களுடனான விசேட சந்திப்பையடுத்து நாடாளுமன்ற அமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.


இதற்கான அதிகாரம் அவருக்கில்லையெனவும் தமது உறுப்பினர்கள் செல்லப் போவதில்லையெனவும் நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்த அதேவேளை மஹிந்த, நாமல் உட்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நாடாளுமன்றம் மைத்ரியின் நடவடிக்கை தொடர்பில் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் மைத்ரிபால சபை அமர்வைத் தவிர்த்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment