மாறி வரும் காலம்: மைத்ரிக்கு எதிராக தேங்காய் உடைப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 November 2018

மாறி வரும் காலம்: மைத்ரிக்கு எதிராக தேங்காய் உடைப்பு!


கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரபலப்படுத்தப்பட்ட தேங்காய் உடைப்பு பூஜைகளை ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஆரம்பித்துள்ளனர்.



மஹிந்த அணியினர் எதிர்த் தரப்பில் இருந்த போது மைத்ரிக்கு எதிராக இவ்வாறான வழிபாடுகளை செய்திருந்த நிலையில் தற்போது சீனிகம தேவாலயத்தில் அப்பகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் தற்போதைய மைத்ரி - மஹிந்த கூட்டுக்கு எதிராக இத்தேங்காய் உடைப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தான் இன்று நாடளாவிய ரீதியில் 'கெட்டவனாக' மாறி விட்டதாகவும் அடுத்த வருடம் வெளியிடும் புத்தகத்தை படித்த பின்னரே தான் நல்லவன் என மக்கள் அறிந்து கொள்வார்கள் எனவும் மைத்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

No comments:

Post a Comment