மைத்ரி 'கசற்'றை மீளப்பெற முடியாது: நீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும்! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 November 2018

மைத்ரி 'கசற்'றை மீளப்பெற முடியாது: நீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும்!


நாடாளுமன்றைக் கலைப்பதற்கான உத்தரவுடன் ஜனாதிபதி வெளியிட்ட சுற்றுநிருபத்தை மீளப்பெறும் அதிகாரம் அவருக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.



நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தருணத்தோடு அதனோடான ஜனாதிபதியின் சட்ட உறவு முடிவடைந்து விட்டதாகவும் இனி உச்ச நீதிமன்றமே இதில் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி இது தொடர்பிலான தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, குறித்த விவகாரத்தில் மைத்ரிபால அவசரப்பட்டு விட்டதாகவும் சுற்றுநிருபத்தை வாபஸ் பெற்று இவ்விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அவருக்கு அண்மையில் அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment