குழப்பத்தை அனுபவித்து தோல்வியை ஏற்க மறுக்கும் மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

குழப்பத்தை அனுபவித்து தோல்வியை ஏற்க மறுக்கும் மஹிந்த!


நாடாளுமன்றில் தமது சகாக்கள் நடாத்திய அராஜகத்தை எவ்வகையிலும் தடுக்க முயலாத மஹிந்த ராஜபக்ச, தனக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலை தொடர்கிறது.


கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் சபை நடுவில் இருந்து மீண்டும் வாக்கெடுப்பை நடாத்திய சபாநாயகர் இரண்டாவது முறையாகவும் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துச் சென்றுள்ளார்.

மஹிந்த அணியின் அராஜகத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடனேயே சபாநாயகர் உள் நுழைந்திருந்தமையும் நாற்காலிகள் மற்றும் வேறும் பொருட்கள் அவர் மீது உடைத்து வீசப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment