
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு கோரி அவர் சார்பான துறவிகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திடீரென ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது பல சேனா செயற்பாட்டாளர்கள் மீது தண்ணீர்ப் பிரயோகம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒரு குழுவினர் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பார் எனவும் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு கிடைக்கும் எனவும் பொது பல சேனா அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment