
சர்வதேச அரங்கில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு எப்போதும் பேராதரவை வழங்கி வந்ததாக புகழாரம் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
மீலாதுன் நபியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், முஸ்லிம்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் இலங்கையில் முஸ்லிம்கள் அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2009 யுத்த நிறைவின் பின் 2014ல் மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி வரை இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்ரோசமாக எழுந்து நின்ற பௌத்த பேரினவாதம் கிறீஸ் யக்கா முதல் அளுத்கம வன்முறை வரை பல்வேறு வழிகளில் முஸ்லிம்களை அடக்குமறைக்குள்ளாக்க முற்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment