நாடாளுமன்றம் நாளை தீப் பிடிக்கலாம்: நலின்! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

நாடாளுமன்றம் நாளை தீப் பிடிக்கலாம்: நலின்!


நாடாளுமன்றம் நாளை தீப்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென்கிறார் நலின் பண்டார.நாளைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படுவதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்காக தலா ஒவ்வொரு அறைகளே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதன் அடிப்படையில், ஏலவே பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வரும் மஹிந்த அணியினர் நாளை எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நலின் மேலும் தெரிவிக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரை உள்நுழைய விடாது தவிர்த்த மஹிந்த அணியினர் வன்முறையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment