மைத்ரி மிகப் பெரிய பொய்யன்: ஹிருனிகா விசனம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

மைத்ரி மிகப் பெரிய பொய்யன்: ஹிருனிகா விசனம்!


மைத்ரிபால சிறிசேன, அடுத்தவரின் புறம் கேட்டு ரணிலுடன் உருவாக்கிக் கொண்டுள்ள தனிப்பட்ட குரோதத்தைத் தீர்த்துக்கொள்ளவும் பழி வாங்கவுமே நாட்டை அதாளபாதாளத்திற்குத் தள்ளியுள்ளதாக தெரிவிக்கின்ற ஹிருனிகா, மைத்ரியைப் போன்ற ஒரு பொய்யன் இனியும் உருவாகி விடக் கூடாது என தெரிவித்துள்ளார்.


அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹிருனிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்ல முறையில் மஹிந்த ராஜபக்சவுக்கு உருவாகி வந்த நன்மதிப்பை கெடுத்து இன்று அவரது நற்பெயரையும் கெடுத்துள்ளமை மைத்ரியின் சூழ்ச்சியெனவும் அதிலிருந்து விடுபடக் கோருவதே இன்று மஹிந்தவுக்கு தான் வழங்கும் பிறந்த நாள் செய்தியெனவும் தெரிவிக்கின்ற அவர், மைத்ரியை நம்பி ஏமாந்து விட்டதாகவும் அதை நினைத்து கவலைப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment