தன் செயலுக்கான விளைவை மைத்ரி அனுபவிப்பார்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

தன் செயலுக்கான விளைவை மைத்ரி அனுபவிப்பார்: சம்பிக்க


14ம் திகதி நாடாளுமன்ற அமர்வை அறிவித்து, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவைத் தேட முனைந்து தோல்வி கண்டுள்ள நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி மைத்ரிபால சிறிசேன மக்களை ஏமாற்ற முனைந்ததாகவும் அதற்கான விளைவை அவர் அனுபவிப்பார் எனவும் தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப் படுவதாகவும், இரத்த ஆறு ஓடுவதைத் தவிர்ப்பதற்காகவுமே தான் நாடாளுமன்றமைத் தான் கலைத்ததாகவும் மைத்ரிபால சிறிசேன தெரிவிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்களை முட்டாளாக்கும் முயற்சியெனவும் சம்பிக்க விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், மைத்ரி சட்ட வரையறைகளுக்குட்பட்டே நாடாளுமன்றைக் கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment