ஆங் சூ கீக்கு வழங்கிய விருதை மீளப்பெற்றது Amnesty Intnl - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

ஆங் சூ கீக்கு வழங்கிய விருதை மீளப்பெற்றது Amnesty Intnl


சர்வதேச அளவில் ஜனநாயகத்தின் போராளியாகக் கருதப்பட்டு பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து அங்கீகாரம் பெற்றிருந்த போதிலும் மியன்மாரில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதற்கெதிராக நடந்து கொண்டு பல கௌரவங்களை இழந்து வருவதன் தொடர்ச்சியில் ஆங் சூ கீயின் மேலும் ஒரு விருது மீளப் பெறப்பட்டுள்ளது.


2009ம் ஆண்டு சர்வதேச மன்னிப்புச் சபையினால் வழங்கப்பட்ட அதி உயர் கௌரவ விருதான Ambassador of conscience விருதே இவ்வாறு மீளப் பெறப்பட்டுள்ளது.

ரோஹிங்யர்கள் மீதான இன அழிப்பினை ஆதரித்து இராணுவத்தின் செயற்பாட்டை அங்கீகரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக உலக அரங்கில் ஆங் சூ கீ வெறுக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment