
புதிதாக 5 கோடி ரூபா பெறுமதியான 10 ரூபா நாணயக்குற்றியை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்ச அரசு சட்டவிரோதமானது என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான விசாரணையும் இடம்பெற்று வரும் நிலையில் இப்புதிய நாணயக் குற்றி வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவத்தின் சிங்கப் பிரிவின் 75வது வருட நிறைவை முன்னிட்டு புதிய 10 ரூபா நாணயம் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றதோடு முதல் நாணயங்களை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி மஹிந்தவிடம் ஒப்படைத்து அவர் ஊடாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment