விடுதலையை நெருங்கும் ஞானசார: மேன்முறையீட்டை வாபஸ் பெற்ற ச.மா. அதிபர்! - sonakar.com

Post Top Ad

Friday, 23 November 2018

விடுதலையை நெருங்கும் ஞானசார: மேன்முறையீட்டை வாபஸ் பெற்ற ச.மா. அதிபர்!


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசாரவை சுதந்திரமாக உலவ விடுவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக பொது பல சேனா தகவல் வெளியிட்டுள்ள நிலையில், ஞானசாரவை கிறிஸ்தவ தேவாலய தாக்குதல் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.



இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போதே தனது மனுவை சட்டமா அதிபர் தரப்பு வாபஸ் பெற்றுள்ள நிலையில் ஞானசாரவின் விடுதலை நெருங்கியுள்ளது.

மஹிந்த அரசில் சுதந்திரமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையையும் வெறுப்புணர்வையும் தூண்டி வந்த ஞானசார, கூட்டாட்சியில் நீதிமன்றத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்ததன் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அப்பின்னணியில் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். ஏலவே சாட்சியை அச்சுறுத்திய விவகாரத்தில் வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் ஞானசார இலகுவாக விடுதலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment