
தம்மை ஆளுங்கட்சியென தெரிவிக்கின்ற போதிலும் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இன்றைய தினமும் சபையை விட்டு வெளிநடப்பு செய்திருந்த மஹிந்த தரப்பு, கரு ஜயசூரியவை இனி சபாநாயகராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கிறது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட கையோடு தினேஸ் குணவர்தனவுக்கு அப்பதவி வழங்கப்பட்டிருந்தது. எனினும், உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் தொடர்ந்தும் கரு ஜயசூரியவே சபாநாயகராக இயங்கி வருகிறார்.
கடந்த சில அமர்வுகள் பெரும்பான்மையை நிரூபிக்கும் பின்னணியில் சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் மீதான வாக்கெடுப்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரேயணியில் இருந்து வாக்களித்து 121 உறுப்பினர் கொண்ட பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில் கம்மன்பிலவும் மஹிந்த அணியும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிரான பிரச்சாரங்களில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment