
கடந்த ஒக்டோபர் 26 முதல் பக்கம் தாவுவதில் வடிவேசு சுரேஷுக்கும் வசந்த சேனாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போட்டியில் இன்று வசந்த சேனாநாயக்க முந்திக் கொண்டுள்ளார்.
தான் இராஜினாமா செய்து விட்டதாக தெரிவித்த வசந்த, கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்த நிலையில் இன்று தேசிய ஐக்கிய முன்னணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
வசந்த சேனாநாயக்க மைத்ரியையும் சேர்த்தே ஏமாற்றி விட்டதாக தகவல் வெளியிட்டிருந்த ஹர்ஷ டிசில்வா வசந்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட படத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment