
2019 தேசிய மீலாத் விழா களுத்துறை மாவட்டத்தில், தர்கா நகரில் நடத்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இவ்வருட தேசிய மீலாத் விழாவின் பிரதான நிகழ்வு இன்று (26) கொழும்பு -10 இல் உள்ள ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அமைச்சரின் தலைமையில் இடம் பெற்றபேது அடுத்தவருட தேசிய மீலாத் விழாவை களுத்துறை மாவட்டத்தில் உள்ள தர்ஹா நகரில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக அவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
இவ்வருட தேசிய மீலாத் விழா மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறையில் நடாத்தவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் அன்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக அதனை மன்னார் மாவட்டத்தில் நடாத்துவதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகள் காரணமாக அதன் பிரதான நிகழ்வுகளை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடாத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் பங்குபற்றி முதல் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசுகள் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம் பெற்றது. கௌரவ அதிதியாக மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல. திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், அமைச்சின் மேலதிகச் செயலாளர் நபீல், திணைக்க அதிகாரிகள், ஆலுவலர்கள், வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், மார்க்க அறிஞர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment