
பொதுத் தேர்தலை சந்திக்க அனைத்து தரப்பும் தயார் என தெரிவிக்கின்ற போதிலும் மஹிந்த நிர்வாகம் நியாயமான தேர்தலை நடாத்தாது என தெரிவித்து அவரது நியமனத்தை சட்டரீதியாக எதிர்த்துப் போராடி வருகிறது ரணில் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி.
எனினும், தான் மஹிந்தவை சட்ட வரையறைகளுக்குட்பட்டே நியமித்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ரணில் - மஹிந்த கூட்டு நிர்வாகத்தின் கீழ் தேர்தலை நடாத்துவது சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என முன்னணி பௌத்த தேரர்கள் கூட்டாக ஆலோசனை வழங்கியுள்ளனர். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற அனைத்து தரப்பினரையும் விரைவாக செயற்படுமாறும் பௌத்த துறவிகள் மட்டத்திலிருந்து குரல் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment