
திறமையான புலனாய்வு அதிகாரியென கருதப்படுவதோடு பல்வேறு முக்கிய விவகாரங்களின் விசாரணைகளை மேற்கொண்டு வந்த முக்கிய அதிகாரியான இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் பொலிஸ் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் பின் பொலிஸ் மா அதிபரினால் நாடாளுமன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இவ்விடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
திட்டமிட்ட குற்றங்கள் விசாரணைக்கான பிரிவிலிருந்து நீர் கொழும்புக்கு நிசாந்த சில்வா மாற்றப்பட்டிருந்தமை அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment