ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் 'பொது' வேட்பாளர்: நவின் - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 November 2018

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் 'பொது' வேட்பாளர்: நவின்



2015ம் ஆண்டு மைத்ரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தி தற்சமயம் தமக்குத் தாமே தீங்கு விளைவித்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் புலம்பி வரும் நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் மீண்டும் பொது வேட்பாளரை முன் நிறுத்தப் போவதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க.



மல்வத்து பீட மகாநாயக்கர்களிடம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியொன்றைக் கையளித்து அங்கு உரையாடிய நிலையிலேயே நவின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன, தற்போது அந்த வாக்குகள் அனைத்தும் மக்கள் தனக்காக வழங்கியதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment