
நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் இடைக்கால பட்ஜட்டுக்குத் தயாராகி வருகிறது மஹிந்த தரப்பு.
தற்சமயம் நிலவும் அரசியல் சூழ்நிலையில் மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாக அநுதாபம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாரிய சலுகைகளுடனான வரவு-செலவுத் திட்டம் ஒன்றை முன் வைப்பன் மூலம் அதனை எதிர்த்து வாக்களிப்பவர்களை மக்கள் நலன்களை எதிர்ப்பவர்களாக புடம் போட்டுக் காட்ட முடியும் என கூட்டு எதிர்க்கட்சி தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இப்பின்னணியில், சமையல் எரிவா, எரிபொருள் விலைகள் குறைப்பு உட்பட சலுகைகளுடனான வரவு - செலவுத் திட்டம் ஒன்றை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றிலும் விவாதத்துக்குட்படுத்தும் எதிர்பார்ப்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment