ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 10 November 2018

ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு


ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ( 09 ) பிற்பகல் 3 . 00 மணிக்கு கொழும்பு 07 , இலக்கம் 24 , ஹோர்டன் பிளேசிலுள்ள லஷ் மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


 ஸ்ரீ லங்காமுஸ்லிம் மீடியா போரத் தின் தலைவர் என் . எம் . அமீன் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹாதர் பிரதம் அதிதியாகவும் முஸ்லிம் அமைச்சர் கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் துருக்கி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கையிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைக்கான துருக்கி தாதரக மும் துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலை யமும் ( Turkish Cooperation art Coordination Agency - TIKA ) இந்த ஊடக உபகரணங்களை வழங்கியுள்ளன .

இந்த ஊடக உபகரணங்கள் வழங்களில் நாட்டில் உள்ள 50க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கமரா மற்றும் மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Farook Sihan

No comments:

Post a Comment