எனக்கு பதவி ஆசையில்லை: சபையில் மஹிந்த ஆவேசம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

எனக்கு பதவி ஆசையில்லை: சபையில் மஹிந்த ஆவேசம்!


பிரதமர் மாத்திரமன்றி ஜனாதிபதி பதவியையும் தான் அனுபவித்துள்ளதாகவும் தனக்கு எவ்வித பதவி ஆசையும் இல்லையெனவும் சபையில் ஆவேசப்பட்டு கருத்துரைத்தார் மஹிந்த ராஜபக்ச.


மஹிந்த ராஜபக்ச உரை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையிலேயே தனதுரையை ஆரம்பிக்கும் போது மஹிந்த இவ்வாறு ஆவேசப்பட்டிருந்தார்.

இதேவேளை, தான் பிரதமர் பதவியை கேட்டு வாங்கவில்லையெனவும் ஜனாதிபதியே அழைத்து அதனைத் தம்மிடம் ஒப்படைத்ததாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளதுடன் அவரது உரை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment