வெளியுறவுத்துறை அமைச்சின் கூட்டத்தை நிராகரித்த வெளிநாடுகள்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

வெளியுறவுத்துறை அமைச்சின் கூட்டத்தை நிராகரித்த வெளிநாடுகள்!


வெளியுறவுத்துறை அமைச்சினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தை பல நாடுகள் புறக்கணித்து, தற்போதைய சூழ்நிலை தொடர்பிலான தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.வெளியுறவுத்துறை அமைச்சர் சரத் அமுனுகமவின் இவ்வழைப்பினை ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் புறக்கணித்துள்ளன.

மஹிந்த தலைமையில் அமையப் பெற்றுள்ள புதிய அமைச்சரவை சட்டவிரோதமானது என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருவதோடு ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றில் வாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment