ஜனாதிபதி பார்த்துக் கொண்டுதான் இருந்தார்: ராஜித! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

ஜனாதிபதி பார்த்துக் கொண்டுதான் இருந்தார்: ராஜித!நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களை ஜனாதிபதி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.


சபையில் கூச்சலும் குழப்பமும் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் தான் ஜனாதிபதியை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கூச்சல் கேட்கிறதா என வினவ, ஆம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என மைத்ரி பதிலளித்ததாக ராஜித தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தவணையை ஒத்திவைக்கப் போவதில்லையென தெரிவித்துள்ள மைத்ரி இன்றைய தினமும் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்வாரா என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment