
தன்னை பிரதமராக ஏற்றுக்கொள்ளும்படி வெளிநாட்டு தூதரகங்களை அணுகி ஆதரவு தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
இப்பின்னணியில் நேற்றைய தினம் தினேஸ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க உட்பட்ட முக்கியஸ்தர்கள் குழு இவ்வாறு தூதரகங்களுக்கு ஏறி இறங்கியிருப்பதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் என அறிவித்த போதிலும், சீன தூதர் வாழ்த்து தெரிவித்திருந்ததைத் தவிர வேறு எவ்வித சர்வதேச அங்கீகாரமும் இதுவரை கிடைக்கப் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment