ஹிட்லரின் வழியில் மஹிந்த: சம்பிக்க ஆவேசம்! - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

ஹிட்லரின் வழியில் மஹிந்த: சம்பிக்க ஆவேசம்!


நாடாளுமன்றத்தின் ஆதரவை இழந்த ஹிட்லர், இரவோடு இரவாக தீ வைத்துக் கொளுத்தி விட்டு தேர்தல் ஒன்றை நடாத்திய வழியிலேயே மஹிந்த ராஜபக்ச குழு தற்போது நடந்து கொள்வதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அங்கு தீ வைக்கப்பட்டது போன்று இங்கு முடியாது போன காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்த் தூள் தாக்குதலும், சபாநாயகர் மீது தாக்குதலும் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதனை அனுமதிக்க முடியாது எனவும், தமது தரப்பு தேர்தலை எதிர்கொள்ள எவ்வித அச்சமும் இல்லையெனினும் இப்பேற்பட்ட அதிகார வெறியர்களின் கீழ் நீதியான தேர்தல் நடக்காது என்பதால் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும் எனவும் சம்பிக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment