பொலிசார் கொலை; கருணா அம்மான் மீது சந்தேகம்: நளின்! - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

பொலிசார் கொலை; கருணா அம்மான் மீது சந்தேகம்: நளின்!


மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் நேற்றிரவு இரு பொலிஸ் உத்தியோத்தர்கள் ரி-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் கருணா அம்மானுக்கு இதில் தொடர்பிருக்கக் கூடும் என சந்தேகப்படுவதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் நளின் பண்டார.


அண்மையில் ட்விட்டர் பதிவொன்றில் ' 2004க்கு முந்தைய கருணா அம்மானை ஐக்கிய தேசியக் கட்சியினர் மறக்க வேண்டாம்' என கருணா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இக்கொலைச் சம்பவம் அவரது வேலையாக இருக்கலாம் என நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

நளின் பண்டாரவின் கருத்தை சுமந்திரன் வழி மொழிந்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a comment