அமெரிக்க $ மில்லியன்களில் பேரம்; சர்வதிகாரம் தலையெடுத்துள்ளது: ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

அமெரிக்க $ மில்லியன்களில் பேரம்; சர்வதிகாரம் தலையெடுத்துள்ளது: ரஞ்சித்
தமக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின் வாங்குவதை உணர்ந்து அவர்களுக்கு அமெரிக்க டொலர் மில்லியன்களில் லஞ்சப் பேரம் நடாத்தப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளது ரஞ்சித் மத்தும பண்டார.

முன்னாள் சட்ட,ஒழுங்கு அமைச்சரான அவர், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்திருந்த நிலையில் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் சர்வாதிகாரம் தவறான நபரின் கைக்குச் சென்றதன் விளைவே நாடு அனுபவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒன்று கூடியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment