
நாடாளுமன்றை ஒத்தி வைத்து, பெருந்தொகை பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்து, மைத்ரிபால சிறிசேன வெட்கம் கெட்ட அரசியலை முன்னெடுப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் லக்ஷமன் கிரியல்ல.
கண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடியுள்ள நிலையில் அங்கு வைத்து செய்தியாளர்களுக்கு கருத்துரைத்த போதிலேயே லக்ஷ்மன் கிரியல்ல இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பாலித ரங்கே பண்டாரவுடன் எஸ்.பி திசாநாயக்க பேரம் பேசிய ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment