வெளிநாடுகள் கவலை: மைத்ரி மனமாற்றம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

வெளிநாடுகள் கவலை: மைத்ரி மனமாற்றம்!ரணில் விக்கிரமசிங்க தனது பெரும்பான்மையை நிரூபித்தால் ஒரே மணித்தியாலத்தில் பதவி விலகப் போவதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தற்போது அதற்கான வாய்ப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.


கடந்த இரு தினங்களாக நாடாளுமன்றம் அமளியில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாடுகள் இலங்கையில் ஜனநாயகம் சரிவைக் கண்டுள்ளதாக விசனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது இயலாத காரியமாகவே இருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதற்கான வாய்ப்பை வழங்க இணங்கியுள்ள ஜனாதிபதி நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இப்பின்னணியில் நாளைய தினம் பெயர்களைக் கொண்டு வாக்கெடுப்பு நடாத்தப்படுவதோடு அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டால் குரல் மூலமான வாக்கெடுப்பை நடாத்தவும் ஜனாதிபதி இணங்கியுள்ளமையும் நேற்றைய தினம் இடையூறுகளுக்கு மத்தியில் அவ்வாறே வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment