எங்கள் பக்கம் 125 பேர்: SB கிளப்பும் புரளி! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

எங்கள் பக்கம் 125 பேர்: SB கிளப்பும் புரளி!


நாடாளுமன்றில் முறையாக நம்பிக்கையில்லா பிரேரணை நடாத்தப்படுவதை தாமும் வரவேற்பதாக தெரிவிக்கின்ற எஸ்.பி. திசாநாயக்க, அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மிக இலகுவாக 125 பேர் மஹிந்த தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் ஏலவே 122 பேர் தம் பக்கம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்ற நிலையில் எஸ்.பி திசாநாயக்க இவ்வாறு தெரிவிக்கிறார்.

இன்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குழப்பப்பட்ட நிலையில் நாளைய தினம் வாக்கெடுப்பை நடாத்த மைத்ரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

rafiudeen yoosuf said...

அப்ப பாராலுமன்ரத்துல மொத்தம் எத்துன பேர்

Post a Comment