
ரணில் விக்கிரமசிங்க பிரபல்யமான அரசியல்வாதியில்லையாயினும் அறிவுபூர்வமான அரசியல்வாதியென தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
தகவல் உரிமை சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடிந்தது ரணில் தலைமையிலான அரசிலேயே எனவும் தெரிவிக்கின்ற ராஜித, மஹிந்த காலத்தில் திருடர்கள் ஆட்சி பீடத்தில் இருந்ததனாலேயே அவ்வாறான துணிகர சட்டம் எதையும் அறிமுகப்படுத்த முடியவில்லையெனவும் இப்போது அரசியல்வாதிகள் பற்றி தூற்றிக் கொண்டிருப்பதை விட அச்சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கிறார்.
அத்துடன் சர்வதேச மட்டத்தில் நன்மதிப்பைப் பெற்றுள்ள ரணில் போன்ற தலைவர்களால் எந்நேரமும் உலகில் எந்த இடத்திலும் தலை நிமிர்ந்து நின்று சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் எனவும் ராஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment