
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு மேலதிக நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் காலை மஹிந்த ராஜபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 15 பேர் கொண்ட குழுவே இவ்வாறு வலியுறுத்தியுள்ள போதிலும் டிசம்பர் 7ம் திகதி தீர்ப்பு வரும் வரை தான் பதவி விலகப் போவதில்லையென மஹிந்த பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், மஹிந்த பிரதமர் பதவியை உரிமை கொண்டாடுவதற்கு எதிராக இன்று தம்பர அமில தேரர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment